யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம் இரவு தெல்லிப்பளை சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மயிலிட்டியைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய வசந்த் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்ததாவது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மற்றுமொரு மேர்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் வீதியில் விழுந்த வேளையில் அதே வீதியில் வந்துகொணடிருந்த கனரக வாகனமானது இளைஞனுடன் மோதியுள்ளது. இதனால் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
