கொரோனாவின் கோரம்! தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்!!!!
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ள பின்னணியிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.