ஆடையகமொன்றில் கல்லாப்பெட்டியை உடைத்து 2.5 கோடி ரூபா கொள்ளை!!
கடவத்தையில் உள்ள ஆடையகம் ஒன்றில் பணப் பெட்டகத்தை உடைத்து 27 மில்லியன் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள 32 வயதான குறித்த சந்தேக நபர் குருணாகல் பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.
இவர் வங்கிக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.