ராஜ் கமல் பிலிம், இன்டெர் நேஷனல் தயாரிப்பில் ரஜினி காந்த் நடிக்கும் 173 -வது படத்தினை “பார்க்கிங் ” படத்தினை இயக்கிய ராஜ்குமார் பாலகிருஷ்ணன் இயக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது .மேலும் நடிகை சாய்பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் நடிப்பது தொடர்பாகி பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகாத நிலயில் தற்போது “தலைவர் ” படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .படத்திற்க்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால் இனிவரும் நாட்களில் ‘தலைவர் -173 ‘ குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சினிமாவில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளருமான சாய் அபியங்கருக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது .சாய் அபியங்கர் தற்போது சூர்யாவின் “கருப்பு”,ராகவலரன்ஸ் இன் “பென்ஸ் ” , அல்லுஅர்ஜுன் -அட்லியின் கூட்டணியில் உருவாகி வருகின்ற AA22XA6 மற்றும் கார்த்தியின் மார்சல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
