அரசியலமைப்பு 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன்….. அடுத்த வாரம்பாராளுமன்றில்!!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று(27/07/2022) நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே,
தயார் செய்யப்பட்டிருந்த 22ஆவது திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் அவ்வப்போது முன்கொண்டு வரப்பட்டன.
இதனையடுத்து,
அதனை நீக்கிவிட்டு அடுத்த அமைச்சரவையில் புதிய ஏற்பாடுகளுடன் திருத்தத்துக்கு அனுமதி பெறப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை,
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடும்வகையில் புதிய அரசியலமைப்பு வரையப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.