சக விமானியின் பயத்தால் ஏற்பட்ட விபத்து….. இரு துண்டாகிய பேருந்து – விமான, பேருந்து பயணிகள் என 60 இற்குமேல் மரணம்!!
கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட பேருந்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235 க்கு நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால்,
கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் நிலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 58 பேர் வரை பயணம் செய்த நிலையில் 15 பேர் மட்டுமே உயிர் தப்பியதோடு ஏனைய 43 பேரும் பரிதாபமாக விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அப்போதைய வான் விபத்து ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையில்,
விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால்,
பிறகு கிடைத்த ஒலி ஆதாரங்கள் மற்றும் விசாரணையில் சக விமானியின் பயத்தில் ஏற்பட்ட விபத்து இது என உறுதிப்படுத்தப்பட்டது.
TransAsia ஏர்வேஸ் விமானம் 235 தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தின் வலது புறம் உள்ள இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறி அதன் ஆற்றலை இழந்துள்ளது.
இதையடுத்து,
விமானத்தின் விமானி லியாவோ சியென்-சுங் மற்றும் அவரது துணை விமானி லியு டிசே-சுங் இடையே நடந்த உரையாடல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு
விமானத்தின் சக விமானி இரண்டாவது இயந்திரத்தை பயத்தில் தவறுதலாக நிறுத்தியுள்ளார்.
விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் நிறுத்தப்பட்டதால்,
தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்தின் போது,
பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்த பேருந்து மீது விமானத்தின் இறக்கைகள் மோதி பேருந்தை இரண்டு பாதிகளாக பிரித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.