தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இதுவரை 4.25 மில்லியன் பதிவுகள் – முதற்கட்ட விநியோகம் பெரும் முன்னேற்றம்….. எரிசக்தி அமைச்சர்!!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை பெரும் முன்னேற்றத்தைக் காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இது குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை QR திட்டத்தில் கிட்டத்தட்ட 50% எரிபொருள் நிலையங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 481 எரிபொருள் நிலையங்கள் (சிபெட்கோ – 409, லங்கா ஐஓசி – 72) இந்த அமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நேற்று 158,208 பேர் எரிபொருள் பாஸ் QR நடைமுறையில் எரிபொருளைப் பெற்றனர் என அவர் கூறியுள்ளார்.
இதேவெளை,
நேற்று(28/07/2022) இரவு 8.30 மணிக்குள் 4.25 மில்லியன் பேர் இதற்கான பதிவுகளை செய்துள்ளனர் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
‘ ‘எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர’ அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……….