உலகை உலுக்கிய Super fast – Coromandel அதிகவேக தொடருந்துகளின் மோதல்….. வெளியாகின உண்மை விபரங்கள்!!

ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி Coromandel அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது.

அதேபோல்,

பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி Super fast அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது.

பெங்களூரு-ஹவுரா தொடருந்து நேற்று முன்தினம்(02/06/2023) இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் தொடருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது

பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் தொடருந்தின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

தடம் புரண்ட தொடருந்தின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.

அந்த தண்டவாளத்தில் கோரமண்டல் அதிவேக தொடருந்து வேகமாக வந்துகொண்டிருந்தது.

இதனால்,

தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா தொடருந்து பெட்டிகள் மீது சென்னை அதிவேக தொடருந்து அதிவேகமாக மோதியது.

இதன் காரணமாகவே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோர விபத்தில் மொத்தம் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்,

900 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம்(02/06/2023) இரவு 7 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் பாரிய புகையிரத விபத்து….. இதுவரை 207 பேர் பலி – 900க்கும் மேற்பட்டோர் படுகாயம்!! – Pasanga FM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *