17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் இன்று காலை பதவியேற்றது!!

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதன் போது புதிய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.

அந்த வகையில்,

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில்,

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது.

 

அதேவேளை,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம்

நாசீர் அஹமட் – சுற்றாடல்

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி

கனக ஹேரத் – நெடுஞ்சாலை

நாலக கொடஹேவா – ஊடகத்துறை

காஞ்சன விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி

சன்ன ஜயசுமண – சுகாதாரம்

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்

விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை

ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு

தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை

எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

இதேவேளை,

சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *