ஒரேயொரு திறமையான நபர் அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே – அவருக்கே என்னுடைய ஆதரவு….. முன்னாள் பிரதமர் மகிந்த!!
விரைவான பொருளாதார மீட்சியைக் கொண்டு வரக்கூடிய ஒரேயொரு திறமையான நபர் அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதனாலேயே,
ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதை தான் ஆதரித்ததாகவும் மகிந்த ராஜபக்ச ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செய்தியில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 20 ஆம் திகதி அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ரணிலுக்கு வாக்களித்தீர்களா என ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை எனக் குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளித்திருந்தார் மகிந்த ராஜபக்ச.
அத்துடன், எங்கள் கட்சியின் சார்பில் டளஸை நிறுத்தினோம், அவருக்கே வாக்களித்தோம் எனவும் அன்று மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
டளஸுக்கு வாக்களித்து விட்டு ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து அரசியல் பரப்பில் பேசுபொருளாக மாறியுள்ளது.