53 ஆவது வருட நிறைவில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்….. 53 நாட்களாக கடலில் தவங்கிடக்கும் கப்பல்!!
மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு
நேற்றுடன்(11/11/2022) 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த வருடத்தில் 53 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும்,
அதே 53 வருட காலப்பகுதியில் மசகு எண்ணெய் கப்பல்,
எண்ணெய் தரையிறக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் சந்தர்ப்பம் எனவும் பெற்றோலிய தொழிற்சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன..
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.