வவுனியாவில் வரலாறு காணாத வறட்சி….. இவ்வருடத்தில் இதுவரையில் 1120 பேர் பாதிப்பு!!
நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நிலவும் வரட்சி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே
வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான் ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“வவுனியா மாவட்டத்தில் நிலவுகின்ற வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது.
மேலும், இம்மக்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுவதனால் குடிநீர் விநியோகத்திற்காக தற்போது குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது” என்றார்..