2022 FIFA நடத்துவதில் உருவாகியுள்ள மிகப்பெரும் தடை….. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு வளைகுடா நாடான கத்தாரில் உலகின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது.
2022 உலகக் கோப்பையில் பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.
இந்நிலையில்,
உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர்.
அதேபோல்,
கத்தார் நாட்டிலும் 28 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நடைபெறும் பிரதான சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
பொதுவாக மத்திய கிழக்கு நாடுகள் பாலைவனம் சார்ந்த பகுதிகள் என்பதால் அங்கு ஒட்டகக் காய்ச்சல் பரவல் காணப்படுவது இயல்பு.
ஒட்டகம் போன்ற விலங்குகளில் இருந்து பரவும் இந்த காய்ச்சலுக்கு மெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் முதலில் பதிவான இந்த மெர்ஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல்,
935 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே,
மெர்ஸ் தொற்றும் உலகப் பெருந்தொற்றாக பரவும் அபாயம் உள்ளது.
எனவே,
கத்தார் உலகக் கோப்பையை காணச் சென்ற பார்வையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் உணவு,
குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,
அந்நாட்டின் சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.