உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை!!

தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை கொரோனா வைரஸ் தொற்று தொடரும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் டொக்டர் அன்டோனியோ குட்டரஸ், உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் 75% வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சிறிய குழுவாக செயல்படும் குறிபிட்ட சில நாடுகள், உலகின் பெரும்பான்மையான தடுப்பூசிகளை தயாரித்து வாங்குகிறது. இந்த நாடுகள் உலகின் பிற நாடுகளின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

எந்த நாடும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இல்லை, உலகம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

செப்டெம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டிலும் 10% பேரும், ஆண்டு இறுதிக்குள் 30% பேரும் தடுப்பூசி போட வசதியாக இருக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் திட்டத்திற்கு போதுமான அளவு டோஸ்களை நன்கொடைகளாக வழங்குமாறு உலக நாடுகளை டொக்டர் அன்டோனியோ குட்டரஸ் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *