சண்டையிட்ட காதலியின் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த இளைஞன்!!
இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் சண்டையிட்ட காதலியின் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (வயது 25).
இவர்,
இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா(வயது 23) என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
விரைவில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி போஜராஜுவை நிர்மலா கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
ஆனால்,
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் போஜராஜு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனால்,
இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது இந்த விவகாரம் போஜராஜுவின் மனைவிக்கு தெரியவரவே அவரும் சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில்,
கடும் ஆத்திரமடைந்த போஜராஜு, நிர்மலாவின் வீட்டுக்கு சென்று சண்டையிட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் நிர்மலாவின் தலையை துண்டித்துள்ளார்.
அங்கிருந்தபடியே ,
நிர்மலாவின் தலையுடன் கானஹொசஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்.
இளம்பெண்ணின் தலையுடன் நபர் வருவதை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் மூழ்கிபோயினர்.
அந்த இளைஞரை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.