யாழிலிருந்து மரணவீட்டில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வந்த சகோதரர்கள்….. நீரில் மூழ்கி மரணம்!!

முல்லைத்தீவுமல்லாவி, வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த குளத்திற்கு நீராடச்சென்ற இரண்டு சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இருவரும்,

யாழ்ப்பாணம் நகரில் இருந்து மரணவீட்டில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 16 வயதுகளையுடைய சகோதரர்கள் எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *