பத்தாம் வகுப்பு மாணவிகள் மூவரை தவறாக பயன்படுத்த முயற்சித்த அதே பாடசாலைஆசிரியர் கைது!!
ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சுமார் 5 வருடங்களாக சந்தேகநபர் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்ததாகவும்
அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த செய்திகளுக்கு பதில் அளிக்காததால் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி,
வட்டவளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகேவின் தலைமையில் 44 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,
செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.