மூன்று பெண்கள் உட்பட ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு நாணயங்களை கடத்திய 5 பேர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணையின் போது டுபாய் செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
22,300 அமெரிக்க டொலர், 63,500 யூரோ, 8725 ஸ்ரேலிங் பவுண், 292,000 சவுதி ரியால் மற்றும் 75,000 டிராம் இவ்வாறு கடத்தி செல்ல முற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.