இன்று மின்வெட்டு தொடர்பில் CEB வெளியிட்டுள்ள தகவல்!!
இன்று மின்சாரத்தை விநியோகிப்பதில் தடை ஏற்படக்கூடும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
சனிக்கிழமை என்பதால், இன்று மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருள் இன்மையால், கொலன்னாவ, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களின் இரண்டு மின்முனையங்களும், மத்துகம மற்றும் துல்ஹிரிய ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களும் செயலிழந்துள்ளன.
இவ்வாறான பின்னணியில்,
இரண்டு கட்டங்களாக, நான்கு பிரிவுகளின் கீழ் இரண்டு தடவைகள் நேற்று நாடுமுழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிட்டு சொல்லவேண்டியது.