இன்று காலை இலங்கையை வந்தடைந்த பைஸர் தடுப்பூசி!!
இலங்கைக்கு சுமார் 80,000 பைஸர் தடுப்பூசி தொகுதி கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.