இன்று மாலை புதிய பிரதமராக ரணில் பதவிப் பிரமாணம்….. பிரபல சிங்கள ஊடகம் தகவல்!!
புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய,
இன்று மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரச தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது இதனால் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க முடியும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.