இன்றைய மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,
பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.