305 ரூபாய் வரை உயர்வடைந்தது டொலரின் பெறுமதி!!
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை இன்று ரூ. 299.00 மற்றும் அதற்கு மேல் உள்ளது.
இன்று பல வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு:
இலங்கை வங்கி – ரூ.299.00
மக்கள் வங்கி – ரூ. 298.99
கொமர்ஷல் வங்கி – ரூ. 299.00
சம்பத் வங்கி – ரூ. 299.00
செலான் வங்கி – ரூ.299.00
HNB – ரூ. 299.00
NTB – ரூ. 299.00
DFCC – ரூ. 299.00
NDB – ரூ. 299.50
அமானா வங்கி – ரூ.305.00
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.74 ரூபாவும் மற்றும் விற்பனை விலை 298.99 ரூபாவும் ஆகும்.
இதேவேளை,
இன்று கனேடிய மற்றும் ஆஸ்திரேலிய டொலர்கள் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
யூரோவின் விற்பனை விலை 331.60 ரூபாவாகும்.