நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,

இப்போது அரச தலைவரின் விலகல் அரசாங்கத்தால் பேசப்படுகிறது

எனவே,

இந்த அநியாயமான கைதுக்கு எதிராக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

கைது செய்யக்கூடாது என காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தீர்மானித்துள்ளோம். தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு மையம் என்ற வகையில் தொழிலாளர் வர்க்கத்தை நாளை 18ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக வருமாறு அறிவிக்கின்றோம் என தெரிவித்தார்.

இதேநேரம்,

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க,

காலிமுகத்திடல் போராட்டத்தில் மட்டுமில்லை திருடர்கள் வேண்டாம்,

திருடிய பணத்தைத் திரும்பக் கொடுங்கள்,

திருடர்கள் இல்லாத நாடு,

ஊழலற்ற நாடு என ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒரே குரலில் கூறுகிறார்கள்.

இந்த நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அதிபர்கள், உழைக்கும் மக்கள், நாங்கள் கொழும்புக்கு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *