தொடருந்து சாரதிகள் மற்றும் மேலதிக நேர சேவையில் ஏனைய ஈடுபடும் சாரதிகள் வேலை நிறுத்தத்திற்கு தீர்மானம்!!
தொடருந்து சாரதிகள் அனைவரும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தொடருந்து தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்தார்.
மீள்திருத்தம் செய்யப்பட்ட புதிய தொடருந்து கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கட்டண மாற்றத்திற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி,
தொடருந்து கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,
நாளை முதல் மேலதிக நேர சேவையில் இருந்து சாரதிகள் அனைவரும் விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.