இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியா விசேட நடவடிக்கை!!
வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,
இதற்க்காக 16 படகுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,
அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து 84 நபர் இதுவரை இந்தியாவிற்கு புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ள நிலையில், மேலும் இருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்திய சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.