திருகோணமலையில் முடக்கப்பட்ட மேலும் ஒரு பகுதி- இராணுவம் பொலிஸார் கடமையில்!
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் சுபதலங்கர மாவத்த தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீதிகளை மறித்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக திருகோணமலையில் ஏற்கனவே பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.