மக்களால் சுற்றி வளைக்கப்பட்டது விடுதி….. கையும் களவுமாக சிக்கிய இளம் யுவதிகள்!!
திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் நேற்று(04/08/2023) இரவு அப்பிரதேச மக்களால் சுற்றிவைக்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரவித்தனர். சுற்றிவளைப்பின் போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இருபெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்தாக உப்புவெளி பொலிஸ் தெரிவித்தனர்.
ஒப்படைக்கப்பட்ட இருபெண்களும் 25 மற்றும் 30 வயதினர் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பெண்களை தாம் கைதுசெய்துள்ளதாகவும் இரு பெண்களையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.