திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்!!
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர். பிசியாக படங்களில் நடித்து வரும் அஜித் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.