திரிபோஷவில் விஷம்….. தயாரிப்பு நிறுவனம் விநியோகித்தவற்றை மீண்டும் சேகரிக்க உத்தரவு!!
நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாதம்பையில் இன்று (20/09/2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
” குழந்தைகளுக்கான திரிபோஷ உணவில் அதிகளவான நச்சுத்தன்மை வாய்ந்த மூலம் பொருள் அடங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்தே விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட திரிபோஷா எனப்படும் போஷாக்கு உணவு
இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களில் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அந்தவகையில்,
திடீரென சேமித்து வைக்கப்பட்ட மூன்று சத்துகள் எதற்காக திரிபோஷவில் சேர்க்கப்பட்டது என விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது விநியோகிக்கப்படும் மூன்று ஊட்டங்களில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த அஃபலரொக்சின் என்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளதுடன்,
விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்களை குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உட்கொண்டுள்ளனர்.
இது மிகவும் ஆபத்தான மற்றும் துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும்.
அஃபலரொக்சின் என்ற விஷம் அடங்கிய மூன்று சத்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்,
சந்தையில் கிடைக்கும் சில குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகளில் அஃபலரொக்சின் உள்ளிட்ட பல்வேறு நச்சுப் பொருட்கள் இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி,
எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள கடைகளை சரிபார்ப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
சந்தையில் ஏதேனும் விஷத்தன்மை கொண்ட உணவுகள் காணப்பட்டால்,
அதனை விற்பனைக்கு வைத்திருக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்” எனக் குறிப்பிட்டார்.