கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கியின் விமானம்!!
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம் ஒன்று நேற்று(04/07/2022) விபத்துக்குள்ளாகியுள்ளது.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான 330 ரக சரக்கு விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியேயின் இஸ்தான்புல்லில் இருந்து சரக்குடன் 330 ரக சரக்கு விமானம் நேற்று(04/07/2022) இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த விமானம் 45 மெற்றிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று(04/07/2022) இரவு 11.30 மணியளவில்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் சரியாக தடுப்பு போடாமல் விமானத்தின் அருகில் நிறுத்தப்பட்டதால்
விமானத்தின் இயந்திரத்துடன் கொள்கலன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானத்திற்கு சிறிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சேதமடைந்த விமானத்தை மீட்கவோ அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறவோ துருக்கியே விமான அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.