நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு அண்மையில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் .குறித்த கட்சியில் இருந்து இதட்கு கடுமையான எதிர்ப்பு பதில் கொடுக்கப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையை குட்டிச்சுவராக்கிய ஒருகுடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சியின் உறுப்பினர் ஒருவர் .தமது தலைவர் பற்றி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம் மற்றும் தமிழீன படுகொலைக்கு காரணமானவர்கள்,தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க துடிக்கும் ஒரு தலைவரை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கடுமையான எச்சரிக்கை வழங்கப்படுகிறது
அது மாத்திரம் இன்றி ,நாமல் ராஜபக்ச,விஜயின் அரசியல் பயனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு கமலின் ஆத்தரவாளர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். …
