20 வயதுக்கு மேட்பட்டவர்கள் முன் எந்த தடுப்பூசி போட்டு இருந்தாலும், பூஸ்டர் டோஸாக அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசி!!
இலங்கையில்,
மார்ச் மாதத்திற்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸாக ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தேவையான அளவு தடுப்பூசி இருப்பை சுகாதார அமைச்சகம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
20 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கு இதற்கு முன் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக சினோபார்ம் வழங்கப்படும் என்று தகவல்கள் வந்தன.
ஆனால்,
சுகாதார நிபுணர்கள் இந்த தகவல்களை நிராகரித்தனர். சினோபார்ம் வழங்கப்பட்டவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசியே மூன்றாவது டோஸாக வழங்கப்பட உள்ளது.
இதேவேளை, நவம்பர் மாதத்திற்குள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தயாராகி வருகிறது.
இதன் பின்னர் இந்த திட்டம் மற்ற வயதுடையோருக்கு விரிவுபடுத்தப்படும்.
இதற்காக அனைத்து மக்களுக்கும் தேவையான எண்ணிக்கையிலான ஃபைசர் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுவிட்டதாகவும், பற்றாக்குறையை எதிர்கொள்ளாது என்றும் சுகாதார நிபுணர்கள் உறுதியளித்தனர்.