இரு யானைகளை அடித்து தூக்கி தடம்புரண்டது யாழிலிருந்து அனுராதபுரம் சென்ற பயணிகள் ரயில்….. சம்பவ இடத்திலேயே பலியானது ஒன்று – கவலைக்கிடமாக மற்றொன்று!!

வவுனியா(Vavuniya) – கனகராயன்குளம் காட்டு பகுதியில் தொடருந்து ஒன்று யானையுடன் மோதி தடம்புரண்டதில் யானை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு யானை பலத்த காயங்களுடன் சிகிச்சைகளிற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் எடுத்து செல்லபட்டுள்ளது என அறியமுடிகிறது.

குறித்த சம்பவம் நேற்று(25/05/2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியக்கிடைத்ததாவது,

யாழில் இருந்து அனுராதபுரம் (Jaffna to Anuradhapura)

நோக்கி சென்ற புகையிரதம் கனகராயன்குளம் காட்டு பகுதியில் தொடருந்து பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் குட்டியுடன் மோதுண்டுள்ளது.

இந்த நிலையில்,

தாய் யானை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதுடன் குட்டி யானை காயங்களுடன் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் (Ministry of Wildlife and Forest Resources Conservation) எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,

விபத்து காரணமாக நான்கு மணி நேரத்தின் பின்னர் மற்றுமொரு தொடருந்து சேவை ஊடாகவே பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *