உக்ரைன்,ரஷ்யா இடையே இன்று 1ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகின்றது .இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ,ஐரோப்பிய நாடுகள் ஆதாரவளித்து வருகின்றன. அதேவேளை ,போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தத்திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை ட்ரம்ப் முன் மொழிந்துள்ளார் . இந்த நிபந்தனைகள் சிலவற்றை ஏற்க உக்ரைன்
மறுத்து வருகின்றது .இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் , அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று
செய்தியாக்களர்களை சந்தித்தார் .அப்போது அவரிடம் உக்ரைன் -ரஸ்ய போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்க்கு பதில் அளித்த ட்ரம்ப், “போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் ,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம் போர் நிறுத்தம். அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது .அனால் இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புரிந்து கொள்ளவில்லை அது எனக்கு ஏமாற்றம் தான் ” என்கிறார்
