உக்ரைன் சுற்றுலா பயணிகளால் இலங்கையில் கொரோனா பரவும் அபாயம்?
உக்ரைனிலிருந்து அந்நாட்டு சுற்றுலாக்குழுவை அழைத்துவருகையில் ஒருசில முறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாக் குழுக்களினால் நாட்டில் தொற்று பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் யால போன்ற பூங்காவுக்கு சென்ற உக்ரைன் நாட்டவர்கள் குறைந்த பட்சம் முகக்கவசத்தைக்கூட அணிந்திருக்கவில்லை என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.
இதேவேளை உலக நாடுகளில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நாடுகளின் பட்டியலில் உக்ரைன் 17வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.