அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்கு போர் ஆயுதங்கள்!!
முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் தொடர்ந்து 5வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,
வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணைகள் இராணுவ ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஏவுகணைகளை வழங்க உள்ளது.
இதனிடையே,
உக்ரைனுக்கு 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் ராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை வழங்குவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.