உலக சுகாதார அமைப்பினால் கூட கணிக்க முடியாது! பொது மக்களுக்கு எச்சரிக்கை
கொரோனா, உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது என்றும் எனவே இந்த சூழ்நிலையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,
புதிய இயல்புநிலை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸூடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா, உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. எனவே இந்த சூழ்நிலையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்த மோசமான அச்சுறுத்தலில் இருந்து தப்பிப்பதைப் பற்றி யாரும் யோசிக்க கூட முடியாது.
இந்தநிலையில் அங்கு உலகம் முழுவதும் வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும். இந்த வைரஸை ஒழிப்பதற்கான ஒரு காலத்தை உலக சுகாதார அமைப்பினால் கூட கணிக்க முடியவில்லை.
கொரோனா தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் அவை 2019 க்கு முன்னர் இருந்ததை போன்ற ஒரு வாழ்க்கையை வாழ உதவக்கூடும் அல்லது உதவாமலும் போகலாம் என்றும் வைத்திய கலாநிதி அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.