இலங்கை நெருக்கடிக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நன்கொடைத் திட்டம்….. உதவ விரும்பும் யாரேனும் நன்கொடை வழங்க அழைப்பு!!
இலங்கையில் சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தற்போதைய நெருக்கடியின் காரணமாக அவதானத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் தெரிவித்துள்ளார்.
ஆகவே நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில்,
நன்கொடைத் திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஹனா சிங்கர் ஹம்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றும் இட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மருத்துவப் பொருட்களில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும்,
இலங்கைக்கு அதன் நண்பர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஹனா சிங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான “ஹனா சிங்கர்” அவர்களின் உத்தியோகபூர்வ Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…..
மேலும்,
நன்கொடை வழங்க விரும்புவோர் “undp.org இன் இந்த உத்தியோகபூர்வ இணைப்பில் சென்று உங்கள் நன்கொடைகளை செலுத்தலாம்……” என ஹனா சிங்கர் மேலும் கூறியுள்ளார்.