பல்கலைக்கழக மாணவர்களுக்கு Covid19 Virus தடுப்பூசிகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில்….. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!!

கொரோனா தொற்றை அடுத்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.

எனவே அவற்றின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசங்களுக்கருகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் நிறைவுற்றதும் பல்கலைக்கழங்களை திறப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *