யாழ் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் மரணம் (புகைப்படங்கள்)!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக்கற்கை துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மொனராகலை – மரக்கலையை சேர்ந்த நவரட்ணம் தில்காந்தி (வயது -26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் கல்விகற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் இவர் தமது சொந்த ஊருக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த போதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.