அனைத்து பல்கலைக்களகங்களின் மீள் ஆரம்பம் தொடர்பாக வெளியான தகவல்!!

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அந்த ஆணைக்குழு அந்த தெரிவித்துள்ளது.

சகல மாணவர்களையும் உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunga) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பரீட்சைகளை நடத்துதல், இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் என்பன தற்போது பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *