வாங்க போருக்கு போவோம்.. வைரலாகும் மன்சூர் அலி கான் பதிவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மன்சூர் அலி கானும் லியோ படத்தில் விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மன்சூர் அலி கானும் லியோ படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜூக்கு நடிகர் மன்சூர் அலி கான் வித்தியாசமான கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை குடுத்து, ஒன்றை வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்!
ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான்!
லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல… அதவுட்டுட்டு, ‘தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு’ !! .. இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்! 500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்! அப்பாவிங்க சாகறாங்க… சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு……. வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!” என்று குறிப்பிட்டுள்ளார்.