வடமராட்சி கடற்பரப்பில் மன்னாரைச் சேர்ந்த பலர் கைது!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் இந்தக் கைது நடவடிக்யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த 25 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கடலட்டை தொழில் இடம்பெறுவதாக கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. அதனால் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்திய 4 படகுகளும் கைப்பற்றப்பட்டன. மீனவர்கள் 11 பேரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.