“அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்”….. போராட்ட களத்தில் உயிரிழந்த மீனவர்களின் ஆத்மா கருத்து!!

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் “அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்” என ஒருவர் கோரிக்கை விடுத்து மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஐந்தாவது நாளாக நேற்றைய தினமும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கருப்பு உடை தரித்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து பாரிய போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.

அந்த போராட்டக் களத்திற்கு திடீரென முழு கருப்பு உடையில் முகம் மூடிய நிலையில் நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

அவ்வாறு நுழைந்தவர் இந்திய மீனவர்களுக்கு உருக்கமான கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் கடலில் உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோருகிறேன்.

அதேவேளை,

இந்திய மீனவர்களிடமும், எமது கடல் வளங்களை, எமது சக மீனவர்களின் வாழ்வாதரத்தை, உயிரை அழைக்காதீர்கள் என கோருகிறேன் எனவும் கருப்புடை தரித்து வந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர் வாழும் மனிதர்களாக பல தடவைகள் பலரிடம் கோரிக்கை விடுத்தும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஐந்து நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்.

எமக்கான தீர்வினை தருவதற்கு எவரும் தயாராக இல்லை.

அதனால்,

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கோரிக்கை விடுக்கிறேன்.

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவிற்கு மதிப்பளித்தாவது, நடவடிக்கைகளை எடுங்கள்.

அந்த மீனவர்களின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *