கோரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் வடிவேலு!!
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
நீண்ட இடைவேளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று இந்தியா திரும்பிய அவருக்கு கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்படும் போது அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,
கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.