பட்டப்பகலில் பாடசாலை வளாகத்துக்குள் இருந்து துவிச்சக்கரவண்டி திருட்டு!!
இளைஞன் ஒருவரால் பாடசாலை வளாகத்துக்குள் துவிச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இச் சம்பவம்,
நேற்று (18/07/2022) பிற்பகல் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விசாரா உத்தியோகத்தர் ஒருவரின் துவிச்சக்கரவண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அவ் உத்தியோகத்தர் அலுவலகத்திற்குள் வேலையாக இருந்தபோது பாடசாலை வளாகத்திற்குள் வந்த இளைஞன் துவிச்சக்கரவண்டியை திருடி சென்றுள்ளார்.
அதற்கான சிசிரிவி காட்சி முழுமையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக,
வவுனியா காவற்துறையினரிடம் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில்,
இது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் அண்மைக்காலமாக வவுனியாவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.