வவுனியா ஹெரவப்பொத்தனை வீதியில் அமைந்துள்ள சிங்கர் இலத்திரனியல் கர்சியறையானது இன்றையதினம் (25.11.2025) காலை 09.45 மணியளவில் தீப்பரவளிற்கு உள்ளாகி முழுமையாக எரிவடைந்துள்ளது.
இந்தக் காட்சியறையின் மேற்தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் இந்த தீபரவியிருக்களமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்தத் தீப்பரவல் இடம்பெற்று சில நிமிடங்களில் மாநகரசபை தீயணைப்புக்குழு சம்பவ இடத்திற்கு வருகைதந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டபோதும் தீயின் கோரத்தன்மை அதிகமாக இருந்ததால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இந்த நிலையில் அங்கு ஒன்றுகூடிய பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயினை அணைக்க போராடி இருக்கின்றார்கள். இவ்வாறு அனைவரும் இணைந்து சுமார் ஒன்றரை மணிநேரங்கள் வரை போராடி தீயிணைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள். மேலும் இந்தத் தீயினைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர், விமானப்படை மற்றும் பொலிஸாரும் இணைந்து போராடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீ விபத்தின் போது உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதோடு பல இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் இதுபோன்ற அனர்த்தங்களின் போது அனைவரும் ஒன்று கூடி அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்க போராடுவது பாராட்டுக்குரிய விடயமாகும். மேலும் தீயினைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.





