“வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்” பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் 29,206 குடும்பங்களைச் சேர்ந்த 80,000 பேர் சுயதனிமையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுய தனிமையில் இருப்பவர்களை இலங்கை இராணுவம், காவல்துறை மற்றும் சுகாதார பிரிவுகள் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார்.
வெளியில் தனிமைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது, மேலும் வெளியாட்களை உள்ளே அனுமதிக்கவும் முடியாது என்றும் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.