வீட்டிலிருந்து வெளியே செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
வீட்டிலிருந்து அன்றாட தேவைகளுக்காக வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றை தம்வசம் வைத்திருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாடு பூராகவும் உள்ள சேவை நிலையங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சேவை பெற்றுக் கொள்ளும் போது அங்குள்ள பதிவுப் புத்தகத்தில் வருகை தரும் நபர்களின் தகவல்களை பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சேவை நிலையங்களில் வருகை தரும் நபர்களின் தகவல்களைப் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து பேனா ஒன்றைக் கொண்டு செல்வதால் கொரோனா தொற்றில் இருந்து எம்மை நாமே பாதுகாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.